தீபாவளி இனிப்பு
வாங்கியவர் : "எப்போ போட்ட ஸ்வீட்..."
கடைக்காரர் : "இன்னிக்குப் போட்டது சார்."
வாங்குகிறவர் : "பெட்டிக்குள்ளே இன்னிக்குப் போட்டீங்க. தயார் பண்ணினது என்னைக்கி?"
தீபாவளிக்கு என்ன வேணும்?
கணவன் : "நகையா, பட்டுபுடவையா, வெளியூர் டூரா?"
மனைவி : "பட்டுப்புடவையும் நகையும் போட்டுகிட்டு வெளியூர் போகணும்?"
இதய வெடி
"பட்டாசு வெடிச்சதும் என் இதயமே வெடிச்ச மாதிரி ஆயிடுச்சு"
"அவ்வளவு சத்தமா?"
"ஊஹம். வெடிச்சுச் சிதறின பேப்பரப் பார்த்தேன். சிவகாசியிலே இருக்கிற என் காதலிக்கு நான் போன மாசம் எழுதின லெட்டர்!"