மாலாடு!

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (14:30 IST)
தேவையான பொரு‌ட்க‌ள்

பொட்டுக் கடலை மாவு-2 கப்
சர்க்கரை-2 கப்
பொடித்த ஏலக்காய்-2 டீ‌ஸ்பூன்
வறுத்த முந்திரிப்பருப்பு-1/2 கப்
சூடான நெய்-2கப்

பொட்டுக் கடலை மாவு, சர்க்கரைப் பொடி இரண்டையும் சேர்த்துக் கலந்து ஏலக்காய் பொடித்துப் போட்டு, வறுத்த முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கலந்து கொ‌ள்ளவு‌ம்.

அ‌தி‌ல் சூடான நெய் ஊற்றிக் கலந்து பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வையு‌ங்க‌ள்.

வைத்து, பாட்டிலில் அல்லது காற்றுப் போகாத டப்பாவில் அடைத்து வைத்து ஒரு மாதம் வரைக்கும் வைத்துச் சாப்பிடலாம்.

மிகவும் நேரம் எடுக்காத, செலவு இல்லாத சுவையான எளிமையான செய்முறையோடு கொண்ட இந்த மாலாடு எல்லாரும் செய்து பார்க்கலாம். அனுபவம் தேவையில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்