Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (14:26 IST)
செய்யத் தேவையான பொருட்கள்
மைதா - 2 கப்
சர்க்கரை - 4 ஸ்பூன்
தேங்காய் - 1/2 கப்
நெய்
எண்ணெய் - தேவையான அளவு
ஏலக்காய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தேங்காயை துறுவி பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
மைதா மாவில் சர்க்கரை, ஏலக்காய் பொடி, வறுத்த தேங்காய், சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட வடை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
குழி பணியாரத்திற்கான கடாயில் எண்ணெய் தடவி சூடாக்கவும்.
கரைத்து வைத்துள்ள மாவை ஒவ்வொரு குழியிலும் இட்டு மேலே எண்ணெய் விடவும். பணியாரம் நன்கு பொன்னிறமானதும் திருப்பி விட்டு இறக்கவும்.
சூடான சுவையான பணியாரம் தயார்.