தீபாவளியை தித்திக்க வைக்க

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (16:56 IST)
தீபாவளி என்று சொல்லும் போதே நமக்கு இனிப்பாக தான் இருக்கும். என்னென்ன இனிப்புகள் செய்யலாம், ருசித்து சாப்பிடலாம் என்று நாக்கில் எச்சில் ஊறும்.

தீபாவளிப் பண்டிகையில், பட்டுப்புடவைக்கு அடுத்த படியாக பெண்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது இ‌னி‌ப்புதான். அப்பாடியா என்று மலைக்கத் தேவையில்லை. குடும்பத்தினரை மகிழ்விக்க உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்த அ‌ல்லது எ‌ளிதான இ‌னி‌ப்புகளை செ‌ய்து அச‌த்து‌ங்க‌ள்.

தீபாவளிக்கு முந்தின நாள் செய்து பார்க்காமல் இரண்டு மூன்று முறை முன்னதாகவே செய்து பார்த்தால் அனுபவம் கை கொடுக்கும். வா‌ழ்‌த்து‌க்க‌ள்.

தீபாவளி லேகியம்

webdunia photoWD
தீபாவளிக்கு ந‌ம் ‌வீ‌ட்டி‌ல் செய்த மற்றும் உறவினர்கள் கொடுத்த பலகாரங்கள் அனைத்தையும் ஒரு கட்டு கட்டிவிட்டீர்கள்... என்ன ஆகும் வயிறு? திக்குமுக்காடிப் போய்விட்டது பாருங்கள்.

அதனை சரி செய்யத்தான் இந்த தீபாவளி லேகியம்....

லேகியம் செய்யத் தேவையான பொருட்கள்

இஞ்சி - 100 கிராம்
வெள்ளம் - 150 கிராம்
சீரகம் - 50 கிராம்
தனியா - 25 கிராம்
நெய் - 50 கிராம்

செய்யும் முறை

புதிதாக பார்த்து வாங்கிய இஞ்சியை நன்கு சுத்தம் செய்து தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தனியாவையும், சீரகத்தையும் அரை மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.

மிக்சியில் அல்லது அம்மியில் இஞ்சியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அதில் ஊற வைத்த தனியா மற்றும் சீரகத்தையும் சேர்த அரைத்துக் கொள்ளவும்.

கலவை நன்றாக அரைந்து விழுதாக ஆனதும் அதில் வெள்ளத்தை பொடி செய்து கலக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து விழுதை அதில் போட்டு நன்கு கிளறவும்.

பின்னர் அதில் நெய்யை விட்டு கிளறிக் கொண்டே இருங்கள். லேகியம் பதத்திற்கு வந்ததும் இறங்கி உலர்ந்த பாத்திரத்தில் பத்திரப்படுத்துங்கள்.