Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2007 (14:30 IST)
சீப்புச் சீடை என்றரும் என்னேவா என்று யோசிக்காதீர்கள்... செய்து பாருங்கள்
பச்சரிசி - 1 படி
உளுத்தம் பருப்பு - 21/2 ஆழாக்கு
தேங்காய் - 2 (பெரியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 லிட்டர் (பொறித்து எடுக்க)
செய்முறை
அரிசியை கழுவி காயவைத்து கொள்ளவும்.
உளுத்தம் பருப்பை நல்ல சூடு வரும்வரை வெறும் வாணலியில் வறுக்கவும்.
உளுத்தம் பருப்பை ஆறவைத்து அரிசியுடன் சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி பால் எடுத்து அடுப்பில் வைத்து பொங்கும்பொழுது இறக்கி வைக்கவும்.
மாவில் உப்பு போட்டு அதில் சூடான தேங்காய்ப் பாலை சிறிது சிறிதாக விட்டு மாவை கெட்டியாக பிசையவும்.
மாவை அச்சில் வைத்துப் பிழிந்து சிறு துண்டுகளாக வெட்டி கையில் வைத்து சுற்றி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
இவ்வாறு ஒட்டை போட்ட அச்சில் போட்டு நீளமாக பிழிந்தால் வரிவரியாக வரும்.
இவற்றை வெட்டிச் சுற்ற வேண்டும். அல்லது சீப்புச் சீடை அச்சு இல்லாதவர்கள் சீப்புச் சீடை செய்யும் பலகையின் மேல் இட்டு நீளமாக வெட்டி சுற்றிச் செய்யலாம்.