இப்போரில் கிருஷ்ணர் ஒரு கால கட்டத்தில் மயக்கமடைந்து விழுந்து விட, தன் கணவரையே தாக்கிய இவனை விடேன் என சத்தியபாமா வில்லை எடுத்து அம்பு மழை பொழிந்தாள். அம்புகளால் துளைக்கப்பட்ட நரகாசுரன் உயிர் பிரிந்து வீழ்கிறான்.
இதன் பின் கிருஷ்ணர் நரகாசுரன் பிடியில் இருந்த பெண்களை மீட்டார். இந்த வதம் நடைபெற்ற நாளின் அதிகாலையில் கிருஷ்ணர் எண்ணெய் தேய்த்து குளித்து தலை முழுகினார். மக்கள் ஆரவாரத்துடன் வீடுகளில் தீபங்களை அணிவரிசையாய் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இதனால் நரகாசுரன் தான் இறந்த நாளை இதேபோல் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என வரம் கேட்டான். அதன்படியே நரகாசுரன் சதுர்த்தி என்றவாறு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.