இன்று சந்திர கிரகணம்

திங்கள், 9 பிப்ரவரி 2009 (17:44 IST)
பி‌ப்ரவ‌ரி 9ஆ‌ம் தே‌தி பெளர்ணமியான இ‌ன்று இரவு இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்த கிரகணத்தை இந்தியா மற்றும் வடக்கு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்ட்ரேலியா, பசிபிக், வட அமெரிக்கா ஆகிய நாடுகளின் பல பகுதிகளில் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையான சந்திர கிரகணம் இரவு 7.30 மணி முதல் 8.50 மணி வரை இருக்கும். இந்த தகவலை ஹைதராபாத்தில் உள்ள இந்திய கோள்கள் ஆய்வு சங்கத்தின் நிறுவனரும், செயலாளருமான ரகுநந்தன் குமார் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கடந்த ஜனவரி 26ஆம் தேதி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்