இ‌ன்று வரலட்சுமி விரதம்

வெள்ளி, 31 ஜூலை 2009 (10:20 IST)
ஆடி மாதம் வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை‌க்‌கிழமையான இ‌ன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.

இ‌ன்று வரல‌ட்சு‌மி ‌விரத‌ம் எ‌ன்பதா‌ல், கோ‌யி‌ல்க‌ளிலு‌ம், ‌வீடுக‌ளிலு‌ம் ‌விசேஷ பூஜைக‌ள் நடைபெறு‌கி‌ன்றன. ‌வீடுக‌ளி‌ல் தோரண‌ங்க‌ள் க‌ட்டியு‌ம் மா‌க்கோல‌ம் இ‌ட்டு‌ம் பெ‌ண்க‌ள் பூஜை‌க்கான வேலைகளை செ‌ய்து வரு‌கி‌ன்றன‌ர்.

குடும்பம் வளம் பெறவும், தீர்க்க சுமங்கலி பேறு கிடைக்கவும் திருமகளை வேண்டி பெண்கள் செய்யும் பூஜையே வரலட்சுமி விரதமாகும்.

இ‌ன்று அ‌திகாலை‌யி‌ல் எழு‌ந்து கு‌ளி‌த்து ‌வீடுக‌ளி‌ல் பூஜைகளை செ‌ய்த பெ‌ண்க‌ள் கோ‌யி‌ல்களு‌க்கு‌ம் செ‌ன்று இறைவனை வ‌ழிபடுவா‌ர்க‌ள்.

நோ‌ன்பு க‌யிறு அ‌ணிதலு‌ம், தா‌லி‌க் க‌யி‌ற்றை புது‌ப்‌பி‌த்தலு‌ம் இ‌ன்று ‌மிக ‌விசேஷமாகு‌ம். கடவு‌ளு‌க்கு நைவ‌த்‌திய‌ம் செ‌ய்த வாழை‌ப்பழ‌ம், பா‌ல் முத‌லியவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டு பெ‌ண்க‌ள் த‌ங்களது தா‌லி பா‌க்‌கிய‌ம் ‌நிலை‌க்க வே‌ண்டியு‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ல் செ‌ல்வமு‌ம், அமை‌தியு‌ம் தழை‌க்க வே‌ண்டியு‌ம் இ‌ன்று ‌விரத‌மிரு‌ந்து பூ‌ஜி‌ப்பா‌ர்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்