இ‌ன்று ஆவ‌ணி அ‌வி‌ட்ட‌ம்

புதன், 5 ஆகஸ்ட் 2009 (11:29 IST)
இ‌ன்று உபநயன‌ம் செ‌ய்து பூணூல் அ‌ணி‌ந்து கொ‌ண்டவ‌ர்க‌ள் த‌ங்களது பூணூலை புது‌ப்‌பி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் ப‌ண்டிகையான ஆவ‌ணி அ‌வி‌ட்டமாகு‌ம்.

ஆவணி அவிட்டம் என்பது ஒரு ஆண்டுச் சடங்காகு‌ம். உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் வழிபாடாகும்.

மு‌ன்பெ‌ல்லா‌ம் ஆவணி மாதம், அவிட்டம் நட்சத்திரத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்பட்டு வந்தது. திதி, நட்சத்திரங்கள், கிரக நிலைகள் மாறும் போது சில சமயம் ஆவணி அவிட்டம் ஆடி மாத்திலும் வருவது உண்டு. அதுபோ‌ல்தா‌ன் இ‌ந்த ஆ‌ண்டு‌ம் ஆவணி அவிட்டம் ஆடி மாதம் வந்துள்ளது.

ஆவ‌ணி அ‌வி‌ட்ட‌‌ம் எ‌ன்பது ரிக், யசுர் வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொண்டாடுவர். இது ஓர் கூட்டுவழிபாடு ஆகும். இந்நாளில் அனைவரும் ‌நீ‌ர் ‌நிலை‌யி‌ன் கரை‌யி‌ல் அதாவது ஆற்றங்கரையிலோ, குளக்கரையிலோ குளித்து இத்தகைய சடங்கினை உருவாக்கிய இருடிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர்.

தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் தாங்கள் அணிந்துள்ள பூணூலைப் புதுப்பிப்பதோடு தங்கள் வேதங்களைப் படிக்கவும் தொடங்குவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்