இந்த வாரத்தில் வரும் சிறப்பு நாட்கள் பற்றிய பஞ்சாங்கம் இது.
ஜூன் 6 சனி - மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில் திருவீதியுலா. சோழவந்தான் ஜெனக மாரியம்மன் விருஷப சேவை. அரியக்குடி, திருக்கண்ணபுரம் ஆகிய தலங்களில் வெண்ணெய்த்தாழி சேவை.
ஜூன் 7 ஞாயிறு - பௌர்ணமி. மதுரை கூடலழகர் தேரோட்டம். பழனி ஆண்டவர் தங்கக் குதிரையில் திருவீதியுலா. திருவண்ணாமலை கிரிவலம்.
ஜூன் 8 திங்கள் - ஆச்சாள்புரம் தோத்திர பூரணாம்பிகா சமேத திருஞான சம்பந்தர் திருக்கல்யாணம். பின்னிரவு விடியல் ஐக்கியம்.
ஜூன் 9 செவ்வாய் - மதுரை கூடலழகர் தசாவதார காட்சி. சோழவந்தான் ஜெனக மாரியம்மன் ரத உற்சவம். அரியக்குடி ஸ்ரீநிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி வரும் காட்சி. பெரிய நகசு.
ஜூன் 10 புதன் - திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம். சோழவந்தான் ஜெனக மாரியம்மன் ரிஷப சேவை. திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி. சிறிய நகசு. கீழ்நோக்கு நாள்.
ஜூன் 12 வெள்ளி - திருவோண விரதம். மேல்நோக்கு நாள். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் அகண்ட தீப தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு. சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.