புதன், 15 ஜூலை 2009 (12:33 IST)
இந்த வாரத்தில் வரும் நாட்களின் சிறப்புகள் மற்றும் விசேஷங்கள் பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள ஜூலை 14 செவ்வாய் - மேல்நோக்கு நாள், திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல். குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு. ஜூலை 15 புதன் - சமநோக்கு நாள், ராமேசுவரம் சேதுமாதவ சன்னதிக்கு விநாயகப் பெருமான் எழுந்தருளி ஆராதனை. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. திருப்பதி ஏழுமலையான் கோயில் சகசர கலசாபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கமன்னார் புறப்பாடு. ஜூலை 16 வியாழன் - சமநோக்கு நாள், தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பம். திருநெல்வேலி, மேல்மருவத்தூர், ராமேசுவரம் தலங்களில் ஆடிப்பூர திருவிழா ஆரம்பம். ஸ்ரீவைகுண்ட வைகுண்ட சுவாமி புறப்பாடு. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஜூலை 17 வெள்ளி - கார்த்திகை விரதம், ஆடி மாத பிறப்பு, கீழ்நோக்குநாள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா ஆரம்பம். படைவீடு அன்னை ரேணுகாம்பாள் அன்ன வாகன்தில் புறப்பாடு. ஜூலை 18 சனி - சர்வ ஏகாதசி. ராமேசுவரம் பர்தவர்த்தினி அம்மன் தங்க கேடயத்தில் வீதி உலா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திர பிரபையிலும் ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் பவனி. நயினார் கோயில் சவுந்திரநாயகி அம்மன் ராஜாட்ஙக சேவை. கீழ்நோக்கு நாள். ஜூலை 19 ஞாயிறு - பிரதோஷம். மேல்நோக்கு நாள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தந்த பரங்கி நாற்காலியிலும், ரெங்கமன்னார் அனுமார் வாகனத்திலும் புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன், தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடு. ஜூலை 20 திங்கள் - மாத சிவராத்திரி. சமநோக்கு நாள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரங்கமன்னார் கோவர்த்தனகிரியிலும் புறப்பாடு.
செயலியில் பார்க்க x