இந்த வார சிறப்புகள்

செவ்வாய், 5 மே 2009 (17:46 IST)
இந்த வாரத்தில் சித்ரா பவுர்ணமி, புத்த பூர்ணிமா போன்ற சிறப்பான நாட்கள் உள்ளன.

5ஆம் தேதி செவ்வாய்

இன்று சர்வ ஏகாதசி. மேல்நோக்கு நாள். மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம். திருவள்ளூர் வீரராகவல் கோயில் தேரோட்டம். திருத்தணி முருகப் பெருமான் காலையில் யாளி வாகனத்தில் புறப்பாடு. இரவு திருக்கல்யாண வைபவம்

6ஆம் தேதி புதன்

பிரதோஷம். சமநோக்கு நாள். நட்சத்திர துவாதசி. மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம். திருவத்திரகோசமங்கையில் திருக்கல்யாணம். சமயபுரம்மாரியம்மன் கோயில் திருவிழா ஆரம்பம்.

7ஆம் தேதி வியாழன்

நயினார் நோன்பு. ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி, சமநோக்கு நாள். நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் தேரோட்டம்.

8ஆம்தேதி வெள்ளி

சித்ரா பவுர்ணமி. புத்த பூர்ணிமா. சமநோக்கு நாள். சம்பத் கவுரி விரதம். திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம். ஏராளமான கோயில்களில் இன்று சித்ரா பவுர்ணமி திருவிழா நடக்கும்.

9ஆம் தேதி சனி

மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல். சமயபுரம் மாரியம்மன் புறப்பாடு. இன்று கருட தரிசனம் நல்லது. கீழ்நோக்குநாள்.

10ஆம் தேதி ஞாயிறு

சமநோக்கு நாள். மதுரை கள்ளழகர் தேனூர் மண்டபம் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருளுதல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம்.

இன்று சூரிய வழிபாடு நல்லது.

11ஆம் தேதி திங்கள்

சமநோக்கு நாள், மதுரை கள்ளழகர் காலையில் மோகன அவதாரம், இரவு மைசூர் மண்டபத்தில் புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருக்கோல்ம்.


வெப்துனியாவைப் படிக்கவும்