இவ்விழாவிற்கான இலச்சினை வெளியீட்டு விழா ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையர் ல் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோவை விழாவிற்கான இலட்சினையும், கோவை விழா மாரத்தானுக்கான டி-சர்ட்-ஐயும் வெளியிட்டனர்.
இதுகுறித்து கோவை விழா தலைவர் ராகுல் கமத் கூறுகையில், "கோவை விழாவில் இந்த ஆண்டு 160 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டும் டபுள் டக்கர் பேருந்து மக்களுக்கு இலவசமாக இயக்கப்பட உள்ளது. இந்தப் பேருந்து கிறிஸ்மஸ் தொடங்கி 20 நாட்களுக்கு இயங்கும்.
இதுதவிர கார் மற்றும் பைக் பேரணி, பள்ளி மாணவர்களின் ஒருமை பயணம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு உரிமை பயணத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெவ்வேறு வழிபாட்டுத்தளங்களுக்கு சென்று வந்து ஒன்றாக கூடி மத ஒருமைப்பாட்டை வலியுறுத்தினர். இந்த ஆண்டு ஒருமைப்பயணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.