கவுசல்யாவுக்கு மாதம் ரூ. 11,250 ஓய்வூதியம்; சங்கரின் தந்தைக்கு சமையலர் பணி

சனி, 2 ஜூலை 2016 (10:44 IST)
உடுமலையில் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு ஓய்வூதியமும், சங்கரின் தந்தைக்கு சமையலர் பணியும் வழங்குவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது.


 
திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டையை சேர்ந்த சங்கரும், கவுசல்யாவும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதனால், உடுமலைப்பேட்டையில் சங்கர் சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். இதில் சங்கரின் மனைவி கவுசல்யாவும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
 
இந்நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விதவைகளுக்கான ஓய்வூதியம், அகவிலைப்படி உட்பட மாதம்தோறும் ரூ.11,250 வழங்கப்பட உள்ளது.
 
மேலும், சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கு திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், பெருமாள்புரம் பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை உண்டு, உறைவிடப்பள்ளியில் சமையலர் பணியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்