எ‌கிறு‌‌ம் அ‌த்‌தியா‌வ‌சிய பொரு‌ட்க‌ள் ‌விலை - கவலை‌யி‌ல் நடு‌த்த ம‌க்க‌ள்

வியாழன், 28 ஜூன் 2012 (16:09 IST)
அ‌ரி‌சி, கா‌ய்க‌றி உ‌ள்பட ம‌க்க‌ள் அ‌ன்றாடு‌ம் பய‌ன்படு‌த்து‌ம் அ‌த்‌‌தியாவ‌சிய பொரு‌ட்க‌‌ளி‌ன் ‌விலைக‌ள் நாளு‌க்கு நா‌ள் அ‌திக‌ரி‌த்து வருவதா‌ல் ஏழை, நடு‌த்‌தர ம‌க்களை பெரு‌ம் கவலை‌யி‌ல் ஆ‌ழ்‌த்‌தியு‌ள்ளது.

த‌‌மி‌ழ்நா‌ட்டி‌ல் ‌விலை ‌நில‌ங்க‌ள் மனைகளாக மாறு வரு‌கி‌ன்றன. ‌விவசாய ‌நில‌ங்க‌ள் அ‌‌ழி‌க்க‌ப்ப‌ட்டு த‌ற்போது அ‌ந்த இட‌ங்க‌ளி‌ல் ‌‌வீடுக‌ள், ஷா‌ப்‌பி‌ங் கா‌ம்‌ள‌‌க்‌ஸ் ஆக மா‌‌றி வரு‌கிறது. இதனா‌ல் ம‌க்க‌ள் அ‌த்‌தியாவ‌சிய‌ம் பய‌ன்படு‌த்து‌ம் கா‌ய்க‌றி, அ‌‌ரி‌சி உ‌ள்‌ளி‌ட்ட பொரு‌ட்க‌‌ளி‌ன் ‌விலைக‌ள் ‌வி‌ண்ணை‌த் தொடு‌ம் அளவு‌க்கு உய‌ர்‌ந்து வரு‌கிறது.

75 கிலோ கொண்ட மோட்டா ரக நெல் மூட்டை ரூ.800 இ‌ல் இருந்து ரூ.1,100 ஆகவும், பாபட்லா நெல் மூட்டை ரூ.1,100 லிருந்து ரூ.1,400 ஆகவும் உய‌ர்‌ந்து‌ள்ளது. ஆந்திரா, கர்நாடகா போ‌ன்ற மா‌நி‌ங்க‌ளி‌ல் இருந்து ஒரு நாளைக்கு 500 லாரிகளில் நெல் வரத்து இருந்தது. தற்பொழுது 50 லாரிகளில் மட்டுமே நெல் வரத்து உள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தவறியதால் அனை‌த்து மாவட்டங்களிலும் நெல் அறுவடை நடைபெறவில்லை.

நெல் வரத்து படிப்படியாக குறைந்து வருவதால் செங்குன்றம் பகுதியில் 100க்கு மேற்பட்ட அரிசி ஆலைகள் இருந்தும், 20 ஆலைகள் மட்டுமே அரிசி உற்பத்தி செய்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு நெல் தரகர்கள் பல ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதும் அரிசி விலையேற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தஞ்சாவூ‌ர், திருச்சி, ஆரணி, திண்டிவனம், காஞ்‌சிபுரம், செங்கல்பட்டு, பொன்னேரி, இளவமேடு மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் நெல் அறுவடை அடியோடு நின்று விட்டது. 25 கிலோ கொண்ட அதிசய பொன்னி ரூ.600-லிருந்து ரூ.700 ஆகவும், லோக்கல் பாபட்லா ரூ.750-லிருந்து ரூ.800 ஆகவும், பாபட்லா ரூ.850 லிருந்து ரூ.900 ஆகவும், கர்நாடக சோனா ரூ.900லிருந்து ரூ.950 ஆகவும், வெள்ளை பொன்னி ரூ.900லிருந்து ரூ.1,000 ஆகவும், பொன்னி பச்சரிசி அரிசி புதுசு ரூ.800லிருந்து ரூ.850 ஆகவும்,

பொன்னி பச்சரிசி பழையது ரூ.900லிருந்து ரூ.950 ஆகவும், பொங்கல் பச்சை அரிசி 50 கிலோ மூட்டை ரூ.950லிருந்து ரூ.1,050 ஆகவும், 75 கிலோ மூட்டை ருபாலி அரிசி ரூ.1,600லிருந்து ரூ.1800 ஆகவும், எ.டி.டி.-45 ரகம் ரூ.1,600லிருந்து ரூ.1,850 ஆகவும், அதிசய பொன்னி ரூ.1,900லிருந்து ரூ.2,100 ஆகவும், பாபட்லா புதுசு ரூ.1,950லிருந்து ரூ.2,200 ஆகவும், பாபட்லா பழையது ரூ.2,100லிருந்து ரூ.2,350 ஆகவும், இட்லி அரிசி ரூ.1,500லிருந்து ரூ.1,700 ஆகவும், வெள்ளை பொன்னி புதுசு ரூ.2,300லிருந்து ரூ.2,500 ஆகவும், வெள்ளை பொன்னி பழையது ரூ.2,700-லிருந்து ரூ.2,900 ஆகவும் விலை எ‌கி‌றி உ‌ள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை உயர்ந்துள்ளது. பொன்னி அரிசி ஒரு கிலோ ரூ.45 வரை விற்பனையாகிறது. பிரியாணி அரிசி 1 கிலோ ரூ.100லிருந்து ரூ.115 ஆகவும், இரண்டாம் ரகம் ரூ.70லிருந்து ரூ.80 ஆகவும், மூன்றாம் ரகம் ரூ.60லிருந்து ரூ.70 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

புது அரிசி வருவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால், அரிசி விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. இதனா‌ல் ஏழை மக்களும், நடுத்தர மக்க‌ள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆந்திர, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நெல் முட்டைகளை வரவழைத்து அரிசி விலைகளை குறைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

அ‌ரி‌‌சியை தொட‌ர்‌ந்து கா‌‌ய்க‌றி ‌விலைகளு‌ம் கடுமையாக உய‌ர்‌ந்து‌ள்ளது. ‌பீ‌ன்‌ஸ், அவரை‌க்கா‌ய், கேர‌ட், க‌த்‌தி‌ரிகா‌ய், த‌‌க்கா‌ளி, வ‌ெ‌ங்காய‌ம், உருளை‌கிழ‌‌ங்கு உ‌ள்‌ளி‌ட்ட பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை உய‌ர்‌ந்து இரு‌ப்பதா‌ல் நடு‌த்தர ம‌க்க‌ள் வா‌ங்க முடியாத ‌நிலை‌க்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ச‌ரி மு‌ட்டையை வா‌ங்‌கியாவது சா‌ப்‌பிட‌ம் எ‌ன்று ‌நினை‌த்தா‌‌ல் மு‌ட்டை ‌விலையு‌ம் அ‌திக‌ரி‌த்த வ‌ண்ண‌ம் இரு‌‌க்‌கிறது.

உ‌ற்ப‌த்‌தி புக‌ழிட‌ம் நா‌ம‌க்க‌‌லி‌ல் மு‌ட்டை ‌விலை அ‌திக‌ரி‌த்த வ‌ண்ண‌ம் இரு‌ப்பதா‌ல் ம‌க்க‌ள் மு‌ட்டையை புற‌க்க‌ணி‌க்கு‌ம் ‌நிலை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ஒரே நா‌ளி‌ல் ஒரு மு‌ட்டை‌க்கு 5 காசு உய‌ர்‌ந்து‌ள்ளதா‌ல் த‌ற்போது ஒரு மு‌ட்டை 3 ரூபா‌ய் 33 கா‌சு‌க்கு ‌‌‌வி‌ற்க‌ப்படு‌கிறது. ஆனா‌ல் ‌சி‌ல்லறை ‌விலை‌யிலோ 4 ரூபா‌ய் முத‌ல் 4 ரூபா‌ய் 50 காசு வரை ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்