கோஹ்லியின் கிரீடத்தில் மற்றுமொரு சிறகு – சச்சின், லாரா சாதனையை மிஞ்ச இருக்கும் ரன்மெஷின் !

வியாழன், 27 ஜூன் 2019 (12:34 IST)
சர்வதேசப் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 20000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு இன்னும் 37 ரன்களே தேவை.

இந்தியா இன்று உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோத இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியில் ரன்மெஷின் என அழைக்கப்படும் இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி குறைந்த இன்னிங்ஸ்களில் 20,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கோலி இப்போது 416 சர்வதேச இன்னிங்ஸ்களில்(131 டெஸ்ட் இன்னிங்ஸ், 222 ஒருநாள் போட்டிகள், 62 டி 20 ) விளையாடி 19963 ரன்கள் சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் 37 ரன்களை அடிக்கும் பொருட்டு அவர் அதிவேகமாக 20,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். இதற்கு முன்னதாக சச்சின் மற்றும் லாரா ஆகிய இருவரு 453 இன்னிங்ஸ்களில் 20,000 ரன்களை சேர்த்ததே சாதனையாக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்