ஈடன் கார்டன்ஸ் மறுபறுசீலனை இல்லை - ஐசிசி திட்டவட்டம்

சனி, 29 ஜனவரி 2011 (15:38 IST)
கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவிருந்த பிப்ரவரி 27ஆம் தேதி இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்த முடிவை திரும்பப் பெறவியலாது என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தேதிக்குள் கட்டுமானப்பணிகளை முடித்து ஐ.சி.சி.யிடம் மைதானத்தை ஒப்படைக்காததால் ஈடன் கார்டன்ஸ் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மேலும் கால அவகாசம் கேட்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐ.சி.சி.யிடம் முறையீடு செய்திருந்தது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷஷான்க் மனோகரிடம், ஐ.சி.சி. தலைமைச் செயலதிகாரி ஹருன் லோர்கட், மைதானத்தை பிப்ரவரி 7ஆம் தேதி ஐ.சி.சி.யிடம் ஒப்படைக்கும் முடிவை ஐ.சி.சி. ஏற்காது என்று மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாக பெங்கால் கிரிக்கெட் சங்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீதமுள்ள 3 போட்டிகளையும் இடம் மாற்றுவதைத் தவிர்க்க தற்போது மைதானத்தின் கட்டுமானப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டிய நெருக்கடியில் பெங்கால் கிரிக்கெட் சங்கம் உள்ளது.

ஐ.சி.சி.யின் இந்த முடிவால் கொல்கட்டா ரசிகர்கள் இந்தியா விளையாடும் போட்டியை நேரில் காணும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்