#WolrdCup2023: : 10 அணிகளைச் சேர்ந்த கேப்டன்களின் குழு போட்டோ!
புதன், 4 அக்டோபர் 2023 (19:10 IST)
உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ள 10 நாட்டு அணிகளைச் சேர்ந்த கேப்டன்களின் குழு புகைப்படத்தை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைகான அனைத்து நாட்டு வீரர்களும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பயிற்சி ஆட்டம் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ள இத்தொடரில் யார் உலகக் கோப்பை வெல்ல போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ள 10 நாட்டு அணிகளைச் சேர்ந்த கேப்டங்களின் குழு புகைப்படத்தை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
ஒரு மைதானத்தில் உலககோப்பையுடன் அனைத்து அணியைச் சேர்ந்த கேப்டன்கள் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.