சமீபத்தில் இந்தியா வந்திருந்த வெஸ்ட்இண்டீஸ் அணி இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி, ஒரு 20 ஓவர் போட்டி, 3 டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்குபெற இருந்தது. இந்நிலையில் சம்பள பிரச்சினை காரணமாக அந்த அணி 4 ஆவது ஒருநாள் போட்டியோடு இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது.
இந்நிலையில் கிரிக்கெட் தொடர் பாதியில் ரத்தானதால் அந்நாட்டு தேர்வு குழு தலைவர் கிளைவ் லாயிட் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய சுற்றுப்பயணம் பாதியில் ரத்தானதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.