வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்தியாவின் வெற்றி தொடருமா?

சனி, 30 ஜூலை 2016 (12:23 IST)
இந்தியா– வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் இன்று தொடங்குகிறது.


 

 
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஆன்டிகுவாவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.
 
இந்திய அணி முதலாவது டெஸ்டில் எளிதான வெற்றிப் பெற்றது. கேப்டன் விராட் கோலி(200 ரன்), அஸ்வின்(113 ரன்), ஷிகர் தவான் (84 ரன்) ஆகியோர் அசத்தினர். பந்து வீச்சில் முதல் இன்னிங்சில் உமேஷ் யாதவ், முகமது ஷமியும், 2வது இன்னிங்சில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும்(7 விக்கெட்) வெஸ்ட் இண்டீஸ் அணியை காலி செய்தனர். 
 
முதல் டெஸ்ட் போலவே இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் அனைவரும் ஆவளுடன் உள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்   

வெப்துனியாவைப் படிக்கவும்