இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 351 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 227 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று கடின இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 118 ரன்கள் வித்தியாசத்தில் அஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தின் முடிவின் போது பெவிலியன் திரும்பி கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா வீரர் டிகாக்கை, ஆஸ்திரேலியா வீரர் வார்னர் ஆவேசமாக தீட்டினார். இந்த நிகழ்வு அங்குள்ள சி.சி.டிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வார்னர் மீது விசாரணை நடத்தப்படும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.