விராட் கோலி சதம்: பெங்களூர் அணி அபார வெற்றி

சனி, 7 மே 2016 (20:53 IST)
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், புனே அணிக்கு எதிராக விளையாடிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சதம் விளாசி பெங்களூர் அணியை வெற்றி பெறச் செய்தார்.


 
 
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் ஆடியுள்ள புனே அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6-வது இடத்திலும், பெங்களூர் அணி 7 போட்டிகளில் ஆடி 2 வெற்றியுடன் 7-வது இடத்திலும் உள்ளனர். இதனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற இரு அணிகளும் வென்றே ஆகவேண்டும் என்ற நிலையில் இன்று மோதின.
 
டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய புனே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி விராட் கோலியின் சதம் மூலம் 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
 
விராட் கோலி 58 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து பெங்களூர் அணியை வெற்றி பெறச் செய்தார். இந்த ஐபிஎல் போட்டியில் விராட் கோலியின் இரண்டாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்