இந்நிலையில் இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறுகையில், களத்தில் கோலி ஆக்ரோஷமாக செயல்படுவது ஒன்றும் குற்றமாக தெரியவில்லை. இளம் வீரரான கோலியிடம் சிறந்த உத்வேகம் உள்ளது. மேலும் இந்திய அணியை பெரிய அளவில் வழிநடத்தும் வாய்ப்பு கோலிக்கு கிட்டும் என்றார்.