138 அணிகள் பங்கேற்கும் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி

ஞாயிறு, 20 ஜூலை 2014 (16:03 IST)
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2014 ஆம் ஆண்டுக்கான 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான 138 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி சென்னையில் ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகிறது.

டி.ஐ.சைக்கிள் நிறுவனம் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடப்பு சாம்பியன் செயின்ட் பாட்ரிக்ஸ், 2 ஆவது இடம் பெற்ற செயின்ட் பீட்ஸ், சாந்தோம், செயின்ட் ஜான்ஸ், நெல்லை நாடார், டான்போஸ்கோ, செட்டிநாடு வித்யாஷ்ரம் உள்பட 68 பள்ளி அணிகள் கலந்து கொள்கின்றன.

16 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடப்பு சாம்பியன் டான்போஸ்கோ, 2 ஆவது இடம் பெற்ற சாந்தோம், எஸ்.பி.ஓ.ஏ, மான்போர்ட் உள்பட 70 பள்ளி அணிகளும் பங்கேற்கின்றன.

காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை நாக்–அவுட் முறையில் ஆட்டம் நடைபெறும். இது 30 ஓவர்கள் கொண்டதாகும். காலிறுதி ஆட்டங்கள் லீக் முறையிலும், அரை இறுதி ஆட்டம் நாக்–அவுட் முறையிலும் நடக்கும்.

காலிறுதியில் இருந்து ஆட்டம் 50 ஓவர்கள் கொண்டதாகும். செயின்ட் பீட்ஸ், அரீவா, காந்திநகர், ராமச்சந்திரா மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி ஆவடியில் உள்ள முருகப்பா கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்