உலகின் வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நார்மன் கார்டன் மரணம்

புதன், 3 செப்டம்பர் 2014 (09:54 IST)
உலகின் மிக வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற சிறப்புடன் இருந்த தென்ஆப்பிரிக்காவின் நார்மன் கார்டன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 103.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாடியிருந்தார். டர்பனில் நடந்த இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா (1939 ஆம் ஆண்டு மார்ச்) இடையே 10 நாட்கள் நடந்து ‘டிரா’ ஆன டெஸ்ட் போட்டியில் இவர் பங்கேற்றுள்ளார். மேலும் அவர் 20 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய வீரர்களில் கடைசியாக உயிரோடு இருந்தவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்