அடுத்த உலகக்கோப்பையில் ஒரு சீனியரும் இருக்கக் கூடாது… சேவாக் அதிரடி கருத்து!

சனி, 12 நவம்பர் 2022 (15:42 IST)
இந்திய கிரிக்கெட் அணி டி 20 உலகக்கோப்பையில் தோற்றதை அடுத்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

உலக கோப்பை டி20 அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் போட்டியிட்டன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டே இழக்காமல் 16 ஓவர்களில் 170 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றினர்.

இதையடுத்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது முன்னாள் வீரர் சேவாக் “அடுத்த முறை இந்திய அணி டி 20 உலகக்கோப்பைக்கு செல்லும் போது அனைத்து சீனியர் வீரர்களையும் கழட்டிவிடவேண்டும். 2007 ஆம் ஆண்டு சென்றது பொன்ற புதிய வீரர்களைக் கொண்ட அணியை அனுப்ப வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்