இந்த ஆட்டத்தில் சங்கக்கரா 13 ரன்கள் எடுத்தபோது ஒரு நாள் போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை கடந்த 4ஆவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்த ஆட்டத்தில் அவரது பங்களிப்பாக 63 ரன்களை குவித்தார். இதுவரை சங்கக்கரா 386 போட்டிகளில் விளையாடி 19 சதத்துடன் 13,050 ரன்கள் குவித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்கள் குவித்து முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் 13,704 ரன்கள் குவித்து இரண்டாம் இடத்திலும், இலங்கையின் ஜெயசூர்யா 13,430 ரன்கள் குவித்து மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
பிறகு இங்கிலாந்து அணி ஆடியபோது, அந்த அணி வீரர் அலெஸ்டர் குக்கை சங்கக்கரா ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றினார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிகம் பேரை ஆட்டம் இழக்கச் செய்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை படைத்தார்.