ஐபிஎல் தரவரிசையில் 16 புள்ளிகள் ப்ளே ஆப் தகுதி பெற தேவைப்படும் நிலையில் 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி 5வது இடத்திலும், ஆர்சிபி அணி 10 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளுமே தங்களுக்கு மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது.
தற்போது டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங் தேர்ந்தெடுத்துள்ளது. வழக்கம்போல ஆர்சிபியின் KGF என வர்ணிக்கப்படும் கோலி, மேக்ஸ்வெல், டூ ப்ளெசிஸை நம்பியே ரன்கள் குவிப்பது உள்ளது. 200+ ரன்களை குவித்தால்தான் ராஜஸ்தான் போன்ற அணிகளை சேஸிங்கில் மடக்க முடியும்.
ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால், சஞ்சு, ஜாஸ் பட்லட், ஹெட்மயர், ஜுரெல் என பேட்டிங்கிற்கு பல நம்பிக்கை நட்சத்திரங்கள் உள்ளனர். யுவேந்திர சஹல் பந்து வீச்சில் கலக்கி வருகிறார். இந்த அணியை எதிர்கொள்வது ஆர்சிபிக்கு சவாலாகவே இருக்கும்.