முதல் ஆட்டத்தில் அம்பையரின் தவறினால் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியை சந்தித்தாலும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பஞ்சாப் அணி வலுவாக உள்ளது. ஆர்சிபி பேட்டிங்கில் அதிக ரன் குவித்தாலும், பவுலிங்கில் நிறைய ரன்களை கொடுத்து விடுவது குறையாக பார்க்கப்படுகிறது.
கடந்த சன் ரைஸர்ஸுடனான ஆட்டத்தில் உமேஷ் யாதவ் ஒரு விக்கட் கூட எடுக்காமல் 4 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்தது ராயல் சேலஞ்சர்ஸுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியது. சஹாலும், சைனி, துபே ஆகியோர் நிதானமாக விக்கெட்டுகளை சூறையாடியதால் ஆர்சிபியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. அதனால் இந்த முறை துபேவுக்கு ஓவர்கள் அதிகம் கொடுத்து, உமேஷுக்கு ஓவர்களை குறைக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.