2023ம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் டி20 போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த போட்டி சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கடைசி போட்டியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே போட்டிகளை அதன் ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த சீசனுடன் தோனி விடைபெறுகிறாரா என்பது குறித்து கருத்து தெரிவித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ”இன்னும் 2, 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து விளையாடக் கூடிய அளவுக்கு தோனி வலுவாக இருக்கிறார்.இந்த வருட ஐபிஎல்தான் அவருக்கு கடைசி என சொல்ல முடியாது” எனக் கூறியுள்ளார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் இந்த சீசனில் சிஎஸ்கே கோப்பை வெல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.