சாதனை நாயகி ஸ்மிருதி மந்தனா! அதிக சதங்கள் அடித்த மிதாலி ராஜின் சாதனை சமன்!

Prasanth Karthick

புதன், 19 ஜூன் 2024 (18:00 IST)
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே நடந்து வரும் ஒருநாள் தொடரில் ஸ்மிருதி மந்தனா சதம் அடித்து மிதாலி ராஜின் சாதனையை சமன் செய்துள்ளார்.



இந்திய கிரிக்கெட்டில் ஆண்கள் அணியை போல பெண்கள் அணியும் பல சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது இந்தியா – தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியிலேயே இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்கா அணியை வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் இந்திய அணி அபாரமாக விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 325 ரன்களை எடுத்துள்ளது. இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா 120 பந்துகளில் 18 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து 136 ரன்களை குவித்தார். அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 88 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்து 103 ரன்களை குவித்தார்.

இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா அடித்த சதத்தின் மூலமாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் (7 சதங்கள்) அடித்த மிதாலி ராஜின் சாதனையை சமன் செய்துள்ளார் ஸ்மிருதி மந்தனா. ஸ்மிருதி மந்தனா ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக விளையாடி கோப்பையை வென்று கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்