ஐபிஎல் ஏலத்தில் எல்லா அணிகளும் முக்கியமான வீரர்களை தங்கள் அணிக்காக எடுத்து வருகின்றனர், ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை இரண்டு வீரர்களை மட்டுமே எடுத்துள்ளது. ஏற்கனவே ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஹர்ஷல் படேலை 10 கோடி ரூபாய்க்கு மீண்டும் எடுத்துள்ளது. அதே போல சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஃபாஃப் டு பிளஸ்சியை 7 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.