அரபு அமீரகத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி பவுலிங் தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே நிதிஷ் ரானா ரன் எடுக்காமலே அவுட் ஆனார். தொடர்ந்து இரண்டாவது ஓவரில் 4 வது பந்தில் ராகுல் ட்ரிபாதியும், 6வது பந்தில் தினேஷ் கார்த்திக்கும் அவுட் ஆனார்கள். தற்போது நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கையாக இயான் மோர்கனும், பேட் கம்மின்ஸும் எதிர்பார்க்கப்படுகிறார்கள்.