நியூசிலாந்திற்கு 281 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

வெள்ளி, 13 ஜனவரி 2023 (19:33 IST)
பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில்  நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது.

 ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் டிரா ஆனது.

அதன்பின்னர், நடந்த  முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானும், 2 வது போட்டியில்  நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றன.

இதையடுத்து 3 வது ஒரு நாள் போட்டி இன்று  நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.

ஜமான் 101 ரன்களும், ரிஸ்வான் 77 ரன்களும், ஆஹா சல்மான் 45 ரன்களும் அடித்தனர்.

எனவே 50 ஓவர்கள் முவிடில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 280 ரன்கள் எடுத்து, நியூசிலாந்திற்கு 281 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.

நியூசிலாந்து அணி சார்பில் சவூதி 3 விக்கெட்டுகளும், பெர்குசன் 2 விக்கெட்டுகளும், ஷோதி , பிரேஸ்வல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்,.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்