அஃப்ரிடி கேப்டன்; 4 புதிய நபர்கள் - டி 20 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி

வியாழன், 11 பிப்ரவரி 2016 (16:13 IST)
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடருக்கான அஃப்ரிடி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
 

 
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணியை தற்பொழுது பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
 
இந்த அணியில் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத புதிய வீரர்கள் 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். குர்ரம் மன்சூர், பாபர் ஆஸம் ஆகிய பேட்ஸ்மென்கள், வேகப்பந்து வீச்சாளர் ருமான் ரயீஸ், மற்றும் ஆல் ரவுண்டர் மொஹமது நவாஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
மொஹமது நவாஸ் 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
பாகிஸ்தான் அணி விவரம்:
 
ஷாகித் அப்ரீடி (கேப்டன்), மொஹமது ஹபீஸ், ஷோயப் மாலிக், உமர் அக்மல், சர்ஃபராஸ் அஹமது, பாபர் ஆசம், இஃப்திகார் அஹ்மது, இமத் வாசிம், அன்வர் அலி, மொகமது இர்ஃபான், வஹாப் ரியாஸ், மொஹமது ஆமிர், மொஹமது நவாஸ், குர்ரம் மன்சூர், ரும்மன் ரயீஸ்

வெப்துனியாவைப் படிக்கவும்