பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்!

சனி, 30 செப்டம்பர் 2023 (07:29 IST)
உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்தியா வந்துள்ள அனைத்து அணிகளும் தற்போது பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகின்றன. முதல் போட்டியாக ஐதராபாத்தில் பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதிய போட்டி நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 345 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் சதமடித்து அசத்தினார். கேப்டன் பாபர் அசாம் 80 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 346 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய நியுசிலாந்து அணி 44 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டியது. அந்த அணியின் ரச்சின் ரவீந்தரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் மற்றும் மார்க் சேப்மான் ஆகியோர் அதிரடியாக அரைசதம் அடித்து இலக்கை எட்ட உதவினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்