இலங்கையின் 117 ரன்களை 8.2 ஓவர்களில் கடந்து நியூசிலாந்து சாதனை

திங்கள், 28 டிசம்பர் 2015 (19:01 IST)
நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை எடுத்த 117 ரன்களை நியூசிலாந்து அணி 8.2 ஓவர்களில் கடந்து சாதனைப் படைத்துள்ளது.
 

 
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில், முதல் ஒருநாள் போட்டியிலும், இலங்கை அணி குவித்த 188 ரன்களை 21 ஓவர்களில் நியூசிலாந்து அணி கடந்தது.
 
இந்நிலையில், கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 27.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் குவித்தது.
 
அந்த அணியில் நுவன் குலசேகரா எடுத்த 19 ரன்களே தனி நபர் ஒருவரின் அதிகப்பட்சமாக அமைந்தது. அவருக்கு அடுத்த்தாக தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா மற்றும் மேத்யூஸ் ஆகியோர் தலா 17 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 4, மிட்செல் மெக்லெனஹன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
 
30 பந்துகளில் [9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்] 93 ரன்கள் விளாசிய மார்சின் கப்தில்
பின்னர், 118 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 8.2 ஓவர்களில் [சராசரி 14.16] வெற்றி இலக்கை எட்டியது. 17 பந்துகளில் அரைச்சதத்தைக் கடந்த தொடக்க ஆட்டகாரர் மார்ட்டின் கப்தில், 30 பந்துகளில் [9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்] 93 ரன்கள் எடுத்தார்.
 
இதன் மூலம் அதிவேக அரைச்சதத்தில், கப்தில், இலங்கை வீரர்கள் ஜெயசூர்யா மற்றும் பெரேராவுடன் 2ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் 17 ரன்கள் எடுத்தார்.
 
இந்த வெற்றி மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் பெற்ற இரண்டாவது பெரிய வெற்றியாகும். இதற்கு முன்னதாக 2007-08ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிராக 15.83 ரன் ரேட் வித்தியாசத்தில் இதே நியூசிலாந்து அணி பெற்றது முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்