உலகில் கால்பந்திற்கு அடுத்து அதிக ரசிகர்களால் கொண்டாடப்படும் விளையாட்டு கிரிக்கெட். இந்த விளையாட்டில் அவ்வப்போது, புதிய மாற்றங்கள், காலத்திற்கேற்ப விதிமுறைகள் அறிமுகம் செய்யப்படுகிறது,
அதில். பந்து பளபளக்க வைக்க பந்தின் மீது எச்சில் பயன்படுத்தி வந்த நிலையில், கொரொனா காலத்தில் இதற்கு கட்டுப்பாடு வந்தது, இந்த நிலையில், இனிமேல் பந்தின் மீது வீரர்கள் எச்சிலை பயன்படுத்தக்கூடாது.
பேட்ஸ் மேங்கள் பந்து வீச்சாளரின் பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது, அவரது கவனத்தை பீல்டிங் செய்வோர் சிதைத்தால், பேட்டிங்செய்யும் அணிக்கு 5 ரன்கள் நடுவரால் வழங்கப்படும்.
தற்போது வரை ஒரு பேட்ஸ்மேன் கேட்ச் ஆல் அவுட் ஆகினால், எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன் தான் பேட்டிங் செய்வார். இனிமேல், புதிதாக வரும் வீரரே பேட்டிங் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பந்து வீச்சாளர் பந்து வீசுகையில்,அங்குள்ள பேட்ஸ்மேன் எல்லைக்கோட்டை தாண்டிச் சென்றால், பந்து வீச்சாளர் மங்கட் முறையில் அவுட் செய்ய இதற்கு முன் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், இனிமேல் இம்முறையில் அவுட் செய்தால் அது அவுட்தான்.