சாதனைப் படைத்த பேட்ஸ்மேன்கள்… டி 20 உலகக்கோப்பை வரலாற்றில் இதுதான் உச்சம்!

vinoth

திங்கள், 24 ஜூன் 2024 (08:31 IST)
டி 20 உலகக் கோப்பை  தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏ பிரிவில் இந்தியாவும் பி பிரிவில் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. இன்னும் இரண்டு அணிகள் எவை என்பதற்கான போட்டி கடுமையாக இருக்கிறது.

இதில் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா அல்லது வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளில் ஒன்றும், ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான் அல்லது ஆஸ்திரேலியா ஆகிய அணிகளில் ஒன்றும் தேர்வாக வாய்ப்புகள் உள்ளன.

இந்த போட்டி தொடர் முழுவதுமே பவுலர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது. அமெரிக்காவில் நடந்த போட்டிகளில் முதலில் பேட் செய்யும் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயிப்பதே சவாலாக இருந்தது. ஆனால் இதுவரை நடந்த டி 20 உலக்க கோப்பை தொடர்களிலேயே அதிக சிக்ஸர் வீசப்பட்ட தொடராக நடந்து வரும் தொடர் அமைந்துள்ளது.

இதுவரை இந்த தொடரில் 419 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் 405 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை 20 அணிகள் விளையாடியதும் போட்டிகள் அதிகமாக நடந்ததும் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட ஒரு காரணம் என்று சொல்லலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்