கடந்த சில ஒருநாள் தொடர்களில் சிராஜின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்து தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சிராஜ் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டில் 20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்களை வீழ்த்தியுள்ள சிராஜ் 729 புள்ளிகளோடு ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
21 இன்னிங்ஸ்கள் மட்டுமே விளையாடியுள்ள சிராஜ் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம் குறைந்த போட்டிகளில் விளையாடி ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 38 இன்னிங்ஸ்கள் விளையாடி ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்திருந்தார்.