மகேந்திர சிங் தோனி மேலும் ஒரு புதிய சாதனை

வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (19:10 IST)
இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐ.பி.எல். போட்டிகளில் 3000 ரன்களை கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளார்.
 

 
2016ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளின் 6ஆவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் கோவா லயன்ஸ் மற்றும் புனே சூப்பர்ஜயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற புனே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் களமிறங்கிய தோனி தலைமையிலான புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஃபாப் டு பிளஸ்ஸி 43 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார்.
 
பின்னர் களமிறங்கிய ரெய்னா தலைமையிலான கோவா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகப்பட்சமாக ஆரோன் பிஞ்ச் 50 (36 பந்துகள்), மெக்கல்லம் 49 (31 பந்துகள்) எடுத்தனர்.
 
இந்தப் போட்டியில், புனே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களை கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளார். இந்த போட்டியில் 14 ரன்களை கடந்தபோது இந்த சாதனையை தொட்டார்.
 
தோனி இதுவரை 131 போட்டிகளில் விளையாடி (15 அரைச்சதங்கள் உட்பட) 3008 ரன்களைக் கடந்துள்ளார். இதற்கு முன்னதாக சுரேஷ் ரெய்னா [3743], ரோஹித் சர்மா [3476], கவுதம் கம்பிர் [3235], விராட் கோலி [3212], கிறிஸ் கெய்ல் [3200], ராபின் உத்தப்பா [3039] ஆகியோர் மூவாயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்