‘அந்த ஒரு விஷயம்தான் கவலையா இருந்துச்சு’… ஆட்டநாயகன் கோலி கருத்து!

வெள்ளி, 20 மே 2022 (12:59 IST)
முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது மோசமான ஆட்டத்திறனில் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் சதம் அடிக்கவில்லை.

தொடர்ந்து சதங்களாக்க குவித்து ரன் மெஷின் என அழைக்கப்பட்ட அவர் இப்போது மோசமான பார்மில் இருக்கிறார். சமீபத்தைய இரண்டு ஐபிஎல் போட்டிகளிலும் அவர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

இந்நிலையில் கோலி கடைசியா சதம் அடித்து 100 போட்டிகளைக் கடந்துவிட்டார். சர்வதேச மற்றும் ஐபிஎல் என அனைத்து விதமான போட்டிகளையும் சேர்த்து அவர் கடந்த 100 இன்னிங்ஸ்களில் சதமே அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் தொடரிலும் 3 முறை டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய லீக் சுற்றுப் போட்டியின் கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி 73 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாகி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அதன் பின்னர் பேசிய அவர் “என்னால் அணிக்கு எந்தளவிலும் பங்களிப்பு செய்ய முடியவில்லை என்பதே எனக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. மற்றபடி நான் இந்த புள்ளிவிவரங்களில் அக்கறை காட்டவில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்