இதற்குதான் ஆட்டத்தை நான்கு நாட்களில் முடித்தார்களா?

புதன், 30 நவம்பர் 2016 (11:41 IST)
யுவராஜ்சிங்கிற்கு இன்று திருமணம். விராட் கோலி தலைமையில் இந்திய அணி 3வது டெஸ்ட் போட்டியை 4வது நாளான நேற்று முடித்ததற்கு இதுவும் காரணம் என்று இணையதளத்தில் மீம்ஸ் பரவி வருகிறது.


 

 
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மற்றும் பாலிவுட் நடிகை ஹசல் கீச் ஆகியோருக்கு இன்று திருமணம் நடைப்பெறவுள்ளது. இதற்காக நேற்று இரவு காக்டைல் பார்ட்டி நடந்தது. இதில் விராட் கோலி மற்றும் பெரும்பாலான இந்திய வீரர்கள் கலந்துக்கொண்டனர்.
 
மொகாலியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி நான்காவது நாளிலே இந்திய வெற்றிப்பெற்று முடித்தது. அதோடு இரவே யுவராஜ்சிங் திருமண நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.
 
இதையோட்டி இணையதளத்தில் வைரலான மீம்ஸ் பரவி வருகிறது. அதில் யுவராஜ் கோலியுடன், ‘என் திருமணத்துக்கு கட்டாயம் வரவேண்டும்’ என்றும் அதற்கு கோலி, ‘சரி அப்போ ஆட்டத்தை நான்காவது நாளிலே முடித்து விடுகிறேன்’ என்றும் கூறுவது போல உள்ளது.
 
இன்று யுவராஜ்சிங் திருமண வைபவம் நடைப்பெறவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்