பயிற்சியில் ஈடுபட்ட கே.எல்.ராகுலுக்கு காயம்! – டெஸ்ட் தொடரிலிருந்து விலகல்!

செவ்வாய், 5 ஜனவரி 2021 (09:58 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடந்து வரும் நிலையில் அணியிலிருந்து கே.எல்.ராகுல் விலகுவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் மெல்போர்னில் தொடங்க உள்ளது.

இதற்கான பயிற்சி ஆட்டங்கள் மெல்போர்னில் நடந்து வந்த நிலையில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் கே.எல்.ராகுல் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவர் டெஸ்ட் தொடரில் விளையாடப்போவதில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் கே.எல்.ராகுல் இல்லாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்