சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தென் ஆப்ரிக்கா வீரர் ஜேக்ஸ் காலிஸ் ஓய்வு

வியாழன், 31 ஜூலை 2014 (18:58 IST)
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தென் ஆப்ரிக்காவின் ஆல்ரவுண்டர் ஜேக்ஸ் காலிஸ் ஓய்வு பெற்றுள்ளார்.
 
தென் ஆப்ரிக்கா அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் காலிஸ். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கும் உலக கோப்பையில் அணிக்கு வெற்றி தேடித்தருவதே தனது லட்சியமாக காலிஸ் கூறியிருந்தார். இதனால், ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தில் காலிஸ் மோசமாக விளையாடினார். 
 
3 போட்டியில் 0, 1, 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்துவீசவில்லை. இதன் காரணமாக, சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக நேற்று திடீர் அறிவிப்பை அவர் வெளியிட்டார். இத்துடன் எனது ஆட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது என அவர் சோகத்துடன் தனது முடிவு அறிவித்துள்ளார். தனது 19 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் 166 டெஸ்டில் விளையாடியுள்ள காலிஸ் 13,289 ரன்கள் எடுத்துள்ளார். 45 சதம், 58 அரைசதம். 328 ஒருநாள் போட்டியில் விளையாடி 11,579 ரன் எடுத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்