31 வயதான இர்ஃபான் பதானுக்கும், சவுதியின் ஜீட்டா நகரைச் சேர்ந்த 21 வயதான மாடல் அழகி சஃபா பாய்க்-கும் மெக்காவில் எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் சந்தித்துக்கொண்டபோது காதலை வளர்த்துள்ளனர்.
இர்ஃபான் பதான் இந்திய அணிக்காக விளையாடி 120 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1544 ரன்களும், 173 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 29 டெஸ்ட் போட்டிகளில் 1,105 ரன்களும், 100 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.