ஐதராபாத்திற்கு எதிரான போட்டி - ஃபீல்டிங் செய்யும் சென்னை அணி
ஞாயிறு, 13 மே 2018 (16:34 IST)
ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் ஃபீல்டிங் முடிவு செய்துள்ளது.
பட்டியலில் ஹைதராபாத் 9 வெற்றி 2 தோல்வியுடன் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி 7 வெற்றி 4 தோல்வியுடன் 2வது இடத்தில் உள்ளது.
புனேவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஐதராபாத் அணியில் யூசுப் பதான் இடம்பெறவில்லை, அவருக்கு பதிலாக ஹூடா களமிறங்கியுள்ளார். சென்னை அணியில் கார்ன் சர்மா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக தீபக் சாஹர் விளையாட உள்ளார்.