ஹர்த்திக் பாண்டியாவை புகழ்ந்த இந்திய அணியின் பயிற்சியாளர்

வியாழன், 17 நவம்பர் 2022 (14:54 IST)
இந்திய கிரிக்கெட் அணியின்  நட்சத்திர வீரர் ஹர்த்திக் பாண்டியாவை புகழ்ந்துள்ளார், தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ்.லட்சுமண்.

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2015 ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஹர்த்திக் பாண்டியா 8 பந்துகளில் 21 ரன் கள் எடுத்து அசத்தினார்.

இதையடுத்து, சச்சின் கூறியதுபோல் ஹர்த்திக் பாண்டியாவுக்கு 2016 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை டி-20 போட்டிக்குத் தேர்வானார். தொடந்து இந்திய அணிக்கு விளையாடி வரும் அவர் பல போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடர் வரும் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளது.இத்தொடரில் மூத்த வீரர்களான கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில்.,டி-20 தொடருக்கு ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக செயல்படவுள்ளார்.

ALSO READ: நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்த்திக் பாண்டியா கேப்டனாக நியமனம்!
 
இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணிக்குப் பயிற்சியாளராகச் செயல்படும், விவிஎஸ் லட்சுமணம், ஹர்த்திக் பாண்டடியா அனைத்து வீரர்களாலும் அணுக்க்கூடியவராக உள்ளார்.  அனைத்து வீரர்களும் அவரை நம்புகின்றனர்,.  அவர் மைதானத்திலும் வெளியிலும் முன்னுதாரணமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்