வங்கதேசத்தை எளிதாக வென்ற இந்தியா

வியாழன், 15 ஜூன் 2017 (21:45 IST)
ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வென்றது.


 

 
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இன்று வங்கதேசம் - இந்தியா ஆகிய அணிகள் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 40.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்து வெற்றிப் பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித், தவான் இருவரும் அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
 
தவான் 46 ரன்கள் அடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின் ரோகித் சர்மாவுடன், கேப்டன் கோலி இணைந்தார். இருவரும் சேர்ந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ரோகித் சர்மா 129 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார். கோலி 78 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார்.
 
இதையடுத்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. வரும் ஞாயிற்று கிழமை இறுதி போட்டி இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைப்பெற உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்