ருத்ரதாண்டவம் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி: முதல் டி-20 போட்டியில் 245 ரன்கள் குவிப்பு

சனி, 27 ஆகஸ்ட் 2016 (21:16 IST)
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. புளோரிடாவில் நடைபெற்றுவரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.


 
 
மேறிகிந்திய தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரரான லீவிஸ் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 பந்துகளில் சர்வதேச டி.20 போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் 11-வது ஓவரை பின்னி வீசினார் இந்த ஓவரில் லீவிஸ் தொடர்ந்து  முதல் ஐந்து பந்துகளில் தொடர்ந்து சிக்ஸர்களை விளாசித் தள்ளினர்.
 
இந்திய பந்து வீச்சை நாலா பக்கமும் பறக்கவிட்ட மேற்கிந்திய தீவு வீரர்கள் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்து, இந்திய அணிக்கு 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலைய இலக்கை நிர்ணயித்துள்ளனர்.
 
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் லீவிஸ் 49 பந்தில் 100 ரன்னும், சார்லஸ் 33 பந்தில் 79 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்